Sunday 11 September, 2011

02.09.2011 திருமலை பயணம்

திருக்கோவிலூர் நண்பன் கென்னடி வீட்டிற்குச்சென்றபோது திருப்பதி போகவேண்டும் என வேண்டுதல் இருப்பதாக கூறினான்.”ஏற்பாடு செய்டா” என கேட்டுக் கொண்டான். கென்னடி என் கல்லூரி நண்பன்.நெடியவன்.மனதாலும்.அரகண்ட நல்லூரில் தானியக் கமிஷன் மண்டியில் ஏஜண்டாக இருக்கிறான்.கடலை,எள்ளு,வங்கி,லாரி,லோடு என சதா சர்வ காலமும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைபவன்.தந்தையின் தொழிலை கற்றுக் கொண்டு வளமாயிருக்கிறான்.பொதுவாக கூட்டுப் பயணம் எனக்கு அலர்ஜி.ஒத்த கருத்துடையவர்களாக இருக்க மாட்டார்கள்.புல்லை புல்லாகவும் கல்லை கல்லாகவும் மட்டுமே பார்ப்பவர்களுடன் பயணிக்க முடியாது.ரசணை முக்கியம்.பயணம் என்பதும் பக்தி என்பதும் வார்த்தைகளைத்தாண்டி பல தளங்களைக் கொண்டது என்பது என் எண்ணம்.ஆன்மீகப் பய்ணத்தில் பெண்கள் சிலரை ஒருங்கிணைப்பதென்பது சிரமம்.உடல் உபாதைகள் இடையூராக இருக்கும்.இருந்தும் பெருமாள் அழைக்கிறார் காலடுப்போம் என முயற்சித்தேன்,ஆன் லைன் இ சுதர்சன் 03.09.2011(சனிக்கிழமை) இருந்தது.ரூம் எதும் இல்லை.திருச்சியிலிருந்து சென்னை,சென்னையிலிருந்து திருப்பதி டிரைன் டிக்கெட்டும் இருந்தது.கென்னடியிடம் பேசினேன்,வீட்டில் கலந்து சொல்வதாகச் சொன்னான்.அடுத்த அரை மணிநேரத்தில் சரி என்றான்.நாங்கள் 1982-85 விருத்தாசலம் கொள்ஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர்கள் கடந்த 3 வருடங்களாக தொடர்பில் இருக்கிறோம்.குடும்ப சந்திப்பு , வீட்டு விசெஷங்கள்,என வருடத்திற்கு ஒரு முறையாவது கூடிவிடுகிறோம்.அவர்களிடமும் சொல்லி வருபவர்கள் வரலாம் என முடிவு செய்தோம்.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.பூமிநாதன்,பாலு ஆகியோர் ஓகெ சென்னார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே