Tuesday 9 August, 2011

பரனூர் Paranur

பரனூர் திருகோவிலூரிலிருந்து ( அரகண்ட நல்லூரிலிருந்து ) 7கிலோ மீட்டர்.ஸ்ரீ அண்ணா ஊர்.நாங்கள் 08.08.2011 அன்று அங்கு சென்று வர உத்தேசித்தோம்.அரகண்டநல்லூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பன் கென்னடி வீட்டிற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து பரனூர் கிளம்பினோம்.கார் போகும் அளவுக்கு வாகான சாலை இருந்தும் சரியான பராமரிப்பு இல்லாததால் ஏழு கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் அடைந்தோம்.
பரனூர்- ஒரு அக்ரஹாரத்தெருவில் முடிவில் ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணர் கோவில்.ஸ்ரீகிருஷ்ணனுக்கு கோவில்.பெரிய பஜனை மண்டபம்.இந்தப்பகுதிகள் சில கோவில்களில் உள்ளது போல கல்லால் ஆன துவஜஸ்கம்பம் .நாங்கள் போன நேரம் மாலை 4.00 . கோவில் திறாந்திருந்தது.கோவிலை ஒட்டிய ஒரு பாடசாலையில் சிறுவர்கள் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தனர்.அது பாடசாலை போல.அப்போது ஒரு காரில் ஸ்ரீஅண்ணா ( கிருஷ்ணப்பிரேமி ) அவர்கள் வந்திரங்கி பாடசாலை உள் சென்றார்.எப்போது அண்ணா பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருப்பார்.ஏகாதசி,துவாதசி ஆகிய தினங்களில் இங்கிருப்பாராம். இது தெரியாமலே நாங்கள் வந்திருந்தோம்.இது தான் கொடுப்பனை.அரை மணிநேரம் பாடசாலையை ஒட்டியிருந்த மகிழமரத்தின் குறுகிய நீளமான கீழிருந்த திண்ணையில் காத்திருந்தோம்.அண்ணாவை பார்க்க சிலர் வந்திருந்தனர்.நிறைய பூமாலை,துளசி பழங்கள் என தட்டு கூடை நிறைய வைத்துக்கொண்டு சிலர் காத்திருந்தனர்.எதற்காக காத்திருந்தனர் கோவிலுக்காகவா...இல்லை அண்ணாவுக்காகவா என எங்களுக்குத்தெரியவில்லை.நாங்களும் காத்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் ஸ்ரீஅண்ணா பாடசாலையை விட்டு வெளியேவந்து வாயிற்படியில் உட்கார்ந்தார்.என்ன ஒரு தேஜஸ்.வந்திருந்தவர்கள் நமஸ்கரித்து ஆளுயர துளசிமாலையினை அணிவித்தனர்.எந்த ஒரு உணர்வும் அண்ணா முகத்தில் இல்லை.எல்லாம் கண்ணனுகே என இருந்தார்.பிறகு துளசி மாலையினை தலைமீது வைத்து கீழெ எடுத்து வைத்தார்.வந்தவரில் ஒருவரிடம் பேசினார். அவருக்கு பேரன் பிறந்திருக்கிறான் எனவும் பெயர் வைக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.(மிகுந்த பவ்யத்துடன்).ஒருடைரி கொண்டுவந்திருந்தனர். அதில் பிறந்த தினத்தைனை எடுத்து அதில் குழந்தைக்கு பெயர் எழுதினார்.அந்த ஜீவன் புண்ணியம் செந்திருக்கிறது.
பிறகு நாங்களும் நமஸ்கரித்தோம்.பூவாவது வாங்கி வந்திருக்கலாம்.வெறும் கையுடன் நமஸ்கரித்தது ஒரு மாதிரியாக இருந்தது.இப்படியெல்லாம் இருக்கும் என எங்களுக்குத்தெரியாது.இருந்தாலும் அண்ணாவை பார்த்ததே இக்கண்கள் செய்த பாக்கியம் என பிறகு எல்லோரும் சொல்லும் போது உணர்ந்தேன்.நாளை ஏகாதசி என எனக்குத்தெரியாது,ஏகாதசி அன்று அண்ணா பரனூரில் இருப்பார் எனவும் எனக்குத்தெரியாது,எல்லாம் அவர் செயல்.போன வாரம் கோவிந்தபுரம் இந்தவாரம் பரனூர்,என இதெல்லாம் நான் மட்டும் திட்டமிடவில்லை என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே