Thursday 5 March, 2009

காம்பினேஷன் மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா?

ஒரு நாள் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று சக்கரத்தாழ்வார் தாயார் தரிசனம் முடித்து எப்போதும் போல பிரசாத ஸ்டால் பக்கம் போனேன்.ஒரு பெண்மனி புளியோதரை வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு பெரியவர்தான் இலையில் வைத்து கொடுத்தார்.அந்த அம்மணி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டார். "தயிர் சாதம், தோசைக்குத்தான் ஊறுகாய் புளியோதரைக்கெல்லாம் தரமுடியாது" என்று முகத்தில் அடித்த மாதிரி சொன்னார். அந்த பெண்மணி முகத்தில் ஒரு அசட்டு வழிசல்.தலை குனிந்து கொண்டே திரும்பிப்போனார். பாவமாக இருந்தது.

இந்த உணவு வகைக்கு இதைத்தான் தொட்டுக் கொள்ளவேண்டும் என சட்டமா போடப்பட்டுள்ளது. கொஞ்சம் ஊறுகாய் கொடுப்பதனால் குற்றமா நிகழ்ந்து விடப்போகிறது.

இட்லிக்கு=சட்ட்னி,சாம்பார்
பூரி = கிழங்கு
புரோட்டா = குருமா
தயிர்சாதம் = ஊறுகாய்
ஆப்பம் = பாயா
இதெல்லாம் சரி தான்.
உயர்வான காம்பினேஷன் தான் அதில் மாற்றமில்லை.இதற்கு மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா? எனது உணவை நானே தேர்வு செய்ய வேண்டும் என்பது நியாயமானது தானே.எனக்கு தெரிந்து எனது அத்தை பையன் ஒருவன் பழய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மொளகாய்பொடி எண்ணை குழைத்து சாப்பிடுவான்.
எனது தகப்பனார் தயிர் சாதத்தில் குழி செய்து தெளிவான ரசத்தை அதில் விட்டு சாப்பிடுவார்.
இட்டிலிக்கு பழனி பஞ்சாமிதம்,
பாயசத்துக்கு வாழைப்பழம்& அப்பளம்,
அடை,அரிசிஉப்புமாவிற்கு வெல்லம் ,
சாம்பார் சாத‌த்திற்கு சாம்பார்,
அடைக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய்,
பிரண்டை துவையலுக்கு சுட்டஎண்ணெய்,
தயிர் சாதத்திற்கு தேங்காய் சட்னி,
என‌ விதியாச‌மான‌ க‌ம்பினேஷன்க‌ளும் உண்டு,இது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ம‌ற்றும் உரிமை.பொது இட‌ங்க‌ளில் ஊறுகாய்க்கென த‌னியே காசு இல்லாத‌போது கொஞ்ச‌ம் கொடுத்துவிடுவ‌தில் என்ன‌ குறைந்து விடப்போகிற‌து.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே