Sunday 29 March, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 2

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 228.03.2009 இன்று காலை வேறு முக்கியமான அலுவல் இருந்ததால் ஸ்ரீரங்கம் செல்வதை மாலை தள்ளி வைத்தேன்.7.45 க்கு கோவிலுக்குள் சென்றேன்.சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள்,தாயார், சேவை முடிய 9.15 ஆகிவிட்டது.நம்பெருமாள் உபய நாச்சியாருடன் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்.காலை நேரத்திதைவிட மாலையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜன நெருக்கடி அதிகம்.காலைவீசி நடக்க முடியாது.சரியாக 9.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் உள் அனுமதிக்கப்படுவதில்லை.விவரம் தெரிந்தவர்கள் சரியாக எங்கு சுற்றினாலும் 8.30 க்கு ஆரியபடாள் வாசலுக்குள் சென்று விடுகிறார்கள்.8.50 க்குள் பெருமாள் சேவை முடித்து ஓட்டமாக தாயார் சன்னதி ஒடி தாயார் சேவையையும் முடித்து விடுகிறார்கள்.9.00 மணிக்கு தாயார் சன்னதி நடை சாத்தப்படும்.அடியேனும் இந்தமுறை அவ்வாறே செய்தேன்.அரவணை என்பது ஒரு பிரசாதம்.இரவு தாயார் சன்னதியிலிருந்து 9.30 மணிக்கும் , பெருமாள் சன்னதியிலிருந்து 10.00 மணிக்கும் நைவேத்யம் முடிந்து வரும்.பிரசாத ஸ்டாலுக்கு பின் உள்ள வாயில் உள்ளே சென்றால்(ஸ்ரீ பண்டாரம் என்று பெயராம் http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/>ஜெயஸ்ரீ பதிவிலிருந்து) இந்த நேரத்திற்கென்றே ஒரு கூட்டம் கிரில் கதவுகளுக்கு பின் ரெடியாக நின்று கொண்டிருப்பர்.சூடான அரவணை ( சர்க்கரைப் பொங்கல் போல இருக்கும்.இனிப்பு அளவாக இருக்கும்,நெய் ஊறிக்கொண்டிருக்கும்)தாயார் சன்னதியிலிருந்து வந்தவுடன் உருண்டை கணக்கில் இலையில் வைத்து தருகிறார்கள்.ஒரு உருண்டை 5.00 ரூ.பிரசாதமாக சாப்பிடலாம்.நிறைய சாப்பிட முடியாது.நெய் அதிகம் என்பதால் திகட்டும்.(சிறிது உவர்ப்பு சுவையுடன் இருக்கும் என்பது கூடுதல் தகவல்).
தகவல்: இரவு 9.30 க்கு தயார் சன்னதியிலிருந்தும்,10.00 மணிக்கு பெருமாள் சன்னதியிலிருந்தும் வரும் அரவணை பிரசாதம் பிரசாத ஸ்டாலில் கிடைக்கும்.
கொசுறு:பாலக்கரை பிர்மான‌ந்தா ச‌ர்ப‌த் 5.00 ரூ விலிருந்து 6.00ரூ ஆகிவிட்ட‌து
இன்று சாப்பிட்ட‌ பிர‌சாத‌ம்: த‌யிர்சாத‌ம் எலுமிச்சை ஊறுகாய்
அர‌வ‌ணை ப‌ற்றிய ஜெயஸ்ரீ யின் சமமைய‌ல் குறிப்புக்கு இங்கே http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/

Friday 27 March, 2009

பெரிய திருவடி

ஸ்ரீரங்கத்தில் கருடாழ்வார் சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே கருடர் சிலை இருக்கிறது . அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி. அந்த வதந்திக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட அடைக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆஜானுபாகுவான கருடரைக் காணும் போதெல்லாம் அவர் பின்னால் உள்ளதாக கூறப்படும் பொக்கிஷம் நினைவுக்கு வருகிறது.மருந்தை சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்ற கட்டளை போல.கருடாழ்வார் சன்னதிக்கு முன் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நாயக்கர் சிலைகளின் பினிஷிங் அப்பா...தொட்டுப்பார்க்கத் தூண்டும்.

Thursday 5 March, 2009

திருப்பதி பெருமாள் தரிசனம்












இந்தமுறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்கு அமந்தது.கல்யாண உற்ஸவத்திற்கு ஆன்லைனில் பணம் கட்டியிருந்தேன்.ரூ.1000/ சரியாக 11.30 க்கு வரிசையில் நின்றால் 1 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் கலியாணத்தை பார்த்துவிட்டு, பிறகு மூலவர் சேவை.தம்பதிகளை மட்டுமே சபையில் அனுமதிக்கிறார்கள்.குழந்தைகள் வந்திருந்தால் சபையின் பக்கவாட்டில் அமரச் சொல்கிறார்கள்.பங்கேற்பாளர்களுக்கு ஒரு அங்கவஸ்த்திரம்,ஒரு ஜாக்கெட்பிட்,பெரிய லட்டு 2 , சிறிய லட்டு 5,பெரிய வடை 1, ஒரு பையில் போட்டு தருகிறார்கள்.எப்பொதும் போல பக்தி பயணத்தின் ஊடே நான் கிளிக்கிய சில வித்தியாசமான காட்சிகள் மேலே.

திருப்பதியில்



திருப்பதியில் இவரைப் பார்த்திருக்கிறீர்களா?






திருப்பதியில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடியது.இவர் என்ன பணி செய்கிறார் என தெரியாது.யானை மீது பட்டர்கள் தீர்த்தம் எடுத்து வரும் போது யானையின் முன்னால் இவர் இரு ஊதுகுழல் வாத்தியத்தை ஒரு சேர வாயில் வைத்து வாசித்து வந்தார்.இந்த வயதிலும் ஒரு துள்ளல் குதியலுடன் இவர் சன்னதியை நோக்கி ஓடியது இன்னும் கண்முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் இவரின் பின்னால் தொடர்ந்து சென்றேன்.புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்ததும் தனது கை பையால் முகத்தை மூடிக்கொண்டார்.

காம்பினேஷன் மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா?

ஒரு நாள் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று சக்கரத்தாழ்வார் தாயார் தரிசனம் முடித்து எப்போதும் போல பிரசாத ஸ்டால் பக்கம் போனேன்.ஒரு பெண்மனி புளியோதரை வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு பெரியவர்தான் இலையில் வைத்து கொடுத்தார்.அந்த அம்மணி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டார். "தயிர் சாதம், தோசைக்குத்தான் ஊறுகாய் புளியோதரைக்கெல்லாம் தரமுடியாது" என்று முகத்தில் அடித்த மாதிரி சொன்னார். அந்த பெண்மணி முகத்தில் ஒரு அசட்டு வழிசல்.தலை குனிந்து கொண்டே திரும்பிப்போனார். பாவமாக இருந்தது.

இந்த உணவு வகைக்கு இதைத்தான் தொட்டுக் கொள்ளவேண்டும் என சட்டமா போடப்பட்டுள்ளது. கொஞ்சம் ஊறுகாய் கொடுப்பதனால் குற்றமா நிகழ்ந்து விடப்போகிறது.

இட்லிக்கு=சட்ட்னி,சாம்பார்
பூரி = கிழங்கு
புரோட்டா = குருமா
தயிர்சாதம் = ஊறுகாய்
ஆப்பம் = பாயா
இதெல்லாம் சரி தான்.
உயர்வான காம்பினேஷன் தான் அதில் மாற்றமில்லை.இதற்கு மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா? எனது உணவை நானே தேர்வு செய்ய வேண்டும் என்பது நியாயமானது தானே.எனக்கு தெரிந்து எனது அத்தை பையன் ஒருவன் பழய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மொளகாய்பொடி எண்ணை குழைத்து சாப்பிடுவான்.
எனது தகப்பனார் தயிர் சாதத்தில் குழி செய்து தெளிவான ரசத்தை அதில் விட்டு சாப்பிடுவார்.
இட்டிலிக்கு பழனி பஞ்சாமிதம்,
பாயசத்துக்கு வாழைப்பழம்& அப்பளம்,
அடை,அரிசிஉப்புமாவிற்கு வெல்லம் ,
சாம்பார் சாத‌த்திற்கு சாம்பார்,
அடைக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய்,
பிரண்டை துவையலுக்கு சுட்டஎண்ணெய்,
தயிர் சாதத்திற்கு தேங்காய் சட்னி,
என‌ விதியாச‌மான‌ க‌ம்பினேஷன்க‌ளும் உண்டு,இது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ம‌ற்றும் உரிமை.பொது இட‌ங்க‌ளில் ஊறுகாய்க்கென த‌னியே காசு இல்லாத‌போது கொஞ்ச‌ம் கொடுத்துவிடுவ‌தில் என்ன‌ குறைந்து விடப்போகிற‌து.

Monday 2 March, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 1

படம் 1 சந்திரபுஷ்கரணி குளம்
படம் 2 தாயாரின் வசந்தமண்டபம்


படம் 3 வசந்தமண்டபம் மூடிய கேட்டிற்கு வெளியிலிருந்து

28.02.2009 இன்று நம்பெருமாள் முn மண்டபத்திலேயே சேவை.கோதை சொன்னது போல பெருமாள் "தேமேன்னு" இருந்தார்.இப்போது மனோரஞ்சிதம் சீசன் போல. ஸ்ரீரங்கத்தில் பல கடைகளில் மனோரஞ்சித பூவை பார்க்க முடிந்தது.தாயார் தரிசனம் நன்கு கிடைத்தது.தாயார் சன்னதியில் வேளுகுடி கிருஷ்ணன் அவர்களை பார்த்தேன். சக தர்மினியோடு வந்திருந்தார்.என்ன ஒரு தேஜஸ்.நீக்ரோவிற்கு இருப்பது மாதிரி சுருள் முடி. பாதி தலை மழுங்கடிக்கப்பட்டிருந்தது.கிஞ்சித்காரம் ஆடியோ சிடியில் இவரது உபன்யாசம் கேட்டிருக்கிறேன்."பாகவத முத்துக்கள்" இவரது சிறப்பான பேச்சு.எப்போது நேரில் கேட்க்கப் போகிறேன் தெரியாது.பெருமாள் அனுக்கிரஹம் வேணும்.

பி.கு
ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் இன்னும் பாவாடை சட்டை, பாவாடை தாவணியில் லட்சணமான குழந்தைகளை பார்க்க முடிகிறது.

இன்றய பிரசாதம் தோசை எலுமிச்சங்காய் ஊறுகாய்.

தகவல்: அப்பம் மாலையில் தான் கிடைக்கும்.

தட்பவெப்பம்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ....என்ன வெய்யில்...காவிரி படுத்தவன் மார்பில் பூணல் மாதிரி ஒரு ஓரமாக‌ நெளிந்து செல்கிறது.